Category Archives: திருமந்திரம்

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 8


தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்கு தாயினும் நல்லன் தாழ்சடை யோனே தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் – இறைவன் தீயை விடச் சூடானவன், நீரை விடவும் குளிர்ச்சியானவன். அவனே தீயில் வெம்மையாகவும், நீரில் குளிர்ச்சியாகவும் அவனே அனைத்து உணர்வுகளாகவும் விளங்குகிறான். ஆயினும் ஈசன் அருள் … Continue reading

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 7


முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன் தன்னையப் பாஎனில் அப்பனு மாயுளன் பொன்னையொப் பாகின்ற போதகத் தானே முன்னை ஒப்பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் – முதலில் தோன்றியவர் என்று கருதத்தக்க மும்மூர்த்திகளுக்கும் மூத்தவன். தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் – தனக்கு இணையாக எதையும் கூற இயலாதவன் தன்னை அப்பா … Continue reading

Posted in திருமந்திரம் | Tagged , , | 3 Comments

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 6


அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே அவனை ஒழிய அமரரும் இல்லை – இறைவனைத் தவிர இறப்பற்றோர் ஒருவரும் இல்லை. இறைவனன்றி விண்ணுலகில் வாழும் தேவர்களும் இல்லை. அவனன்றி செய்யும் அருந்தவம் இல்லை – இறைவனின் அருளன்றி செய்யும் தவங்கள் … Continue reading

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 5


சிவனோடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனோடொப் பாரிங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே சிவனோடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை – சிவனுக்கு ஒப்பாகக் கூறும் தெய்வம் எங்கு தேடினாலும் காண இயலாது. மாலும் அயனும் அடிமுடி தேடிய உண்மை அனைவரும் அறிந்ததே. ஒரு பொருளின் ஒரு … Continue reading

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 4


அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப் பகலிடத் துமிர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே அகலிடத்தார் மெய்யை – அகலிடம் ஆகிய இவ்வுலகத்து உயிர்களின் உள்ளிருக்கும் உண்மைப் பரம்பொருளை. உயிர் என்பது என்ன? அது உடலில் எங்கு உள்ளது? நம் உடலில் உயிராக, பிராண சக்தியாக விளங்குபவன் இறைவனே. … Continue reading

Posted in திருமந்திரம் | Tagged , , | 1 Comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 3


ஒக்கனின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென் றேத்திடு நாதனை நாடொறும் பக்கநின் றாரறி யாத பரமனை புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே ஒக்க நின்றானை – யாதுமாகி நின்ற ஒருவனை. இறைவன் ஒருவனே என்பதே அனைத்து சமயங்களின் மையக் கருத்தாகும். சைவர்கள் இறைவனை சிவன் என்றும், வைணவர்கள் விஷ்ணு என்றும், இஸ்லாமியர்கள் அல்லா என்றும், கிறிஸ்தவர்கள் … Continue reading

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 2


போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை – அனைத்து உயிர்களும் போற்றிப் புகழும், நிலைத்து விளங்கும் தூயவனை நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளுக்கும், … Continue reading

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment